Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இஸ்ரேல் கொமாண்டோகளிடம் இலங்கை சமீரா மெஹ்பூப்தீன்?

இஸ்ரேல் கொமாண்டோகளிடம் இலங்கை சமீரா மெஹ்பூப்தீன்?

சிறிலங்காவின் திறைசேரியில் இடம்பெற்ற இணைய ஊடுருவல் திருட்டில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சுவாகா செய்யப்பட்ட நிலையில் மடிக்கனமுள்ள ஆட்சித்தரப்பு இந்த விடயத்தில் உண்மை சொல்லவில்லையென்பதை அவர்கள் சார்ந்த அதிகாரிகளின் ஓடி- ஒளிப்புகள் சான்றாகின்றன.

இந்த விடயத்தில் இன்று கோப் எனப்படும் பொது நிதிக் குழுவின் முன்னால் தான் தோன்றப்போவதில்லையென திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும ஒடியொளிக்க ஹர்ஷனஇவ்வாறு கோப் குழுவுக்கு அழைக்கபட்டமை தனக்கு தெரியாதென கோப்பின் தலைவரான ஹர்ஷாவும் இன்று பகல் புதிய குண்டை போட்டிருக்கிறார்.

ஆகமொத்தம் மத்திய கிழக்கில விடும் குண்டுகளை போல இலங்கையில் அரசியல் குண்டுகள் விழுகின்றன. அதில் ஒரு குண்டாக ராஜபச்சகள் பதுக்கிய பணம் குறித்த அனைத்து விவரங்களையும் அரசாங்கம் வெளியிடும் என ரில்வின் கூறியுள்ளார். ஆனால் அது எப்போது என்பதுதான் ரில்வினுக்கும் தெரியாது.

தமது ஆட்சி மீதான விமர்சனங்கள் அதிகரிப்பதால் மீண்டும் ராஜபக்சக்;களின் பதுக்கல் பணம் குறித்த உச்சாடனங்களை ஜேபிபி தீவிரப்படுத்துகின்றது.

இதற்கிடையே காசாவை நோக்கி புறப்பட்ட மனிதாபிமான உதவிக் கப்பல் தொடரை இஸ்ரேலிய கடற்படை இடைமறித்த நிலையில் அதில் பயணித்த இலங்கையை சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினரான சமீரா மெஹ்பூப்தீனின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில் இலங்கைக்கு அருகே அமெரிக்க படையினரால் கடந்த சில தினங்களுக்கு கைப்பற்றப்பட்ட எம்.ரி ரிபனி மற்றும் மஜஸ்ரிக் எக்ஸ் பீனிக்ஸ் ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்களும் தற்போது அமெரிக்காவால் டியாகோ கார்சியா இராணுவத் தளத்துக்கு நகர்த்துவதாக தெரியும் நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil