தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்கள் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
"எமது அரசாங்கம் - இரண்டு ஆண்டுகள். நாட்டிற்கு ஆசிர்வாதம்" என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மக்கள் பேரணி இன்று (20) மாத்தறை - அக்குரஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றுவருகின்றது.
தற்போதைய அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் ஆற்றிய சேவைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதையும், எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மக்கள் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த மக்கள் பேரணியில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக களுத்துறை மாவட்டம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கியதாக ஜனாதிபதியின் மக்கள் பேரணி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

