Dailyhunt
கடற்றொழில் படகுகளுக்கென எரிபொருள் மானியம் வழங்க அனுமதி

கடற்றொழில் படகுகளுக்கென எரிபொருள் மானியம் வழங்க அனுமதி

டற்தொழில் படகுகளுக்கென எரிபொருள் மானியம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 20ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடற்றொழிலாளர்கள் தமது தொழிலை முன்னெடுப்பதில் முகம்கொடுக்கும் சிரமங்கள் குறித்து கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய போதே குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிலை முன்னெடுப்பதில் சிரமம்

குறித்த கலந்துரையாடலில், சிறிய படகுகளுக்கென ஒரு லீற்றருக்கு 50 ரூபாவும் பலநாள் கடற்தொழில் படகுகளுக்கென ஒரு பயணத்திற்கு 150,000 ரூபா மானியம் வழங்கப்படும்.

உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடற்தொழிலாளர்கள் தமது தொழிலை முன்னெடுப்பதில் சிரமங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

இதனால் கடற்தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை குறைக்கும் வகையில் அவர்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்க வேண்டும் என இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil