Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கடும் மழையால் நீரில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழப்பு

கடும் மழையால் நீரில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழப்பு

ன்று (20) காலை பெய்த கடும் மழையால் ரிடிகஹ ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்த நிலையில், அதில் விழுந்த 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், அம்பாகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கபட்டுகின்றது.

இவர் அவிசாவளை - புலத்கொஹுபிட்டிய வீதியில் பொல்கட்டுவங்குவ அருகே பாயும் ரிடிகஹ ஓயாவில் தவறி விழுந்ததாக விசாரணைகளின் மூலம் தெரிவிக்கபட்டுள்ளது.

கரவனெல்லை ஆரம்ப வைத்தியசாலை

இதன் பின்னர் பிரதேசவாசிகள் மற்றும் ருவன்வெல்ல காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, அவர் விழுந்த இடத்துக்கு கீழ்புறமுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சடலத்திற்கான பிரேதப் பரிசோதனை கரவனெல்லை ஆரம்ப வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil