Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காங்கேசன்துறை ஊடாக தங்கம் கடத்த முயன்ற 11 இந்தியர்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

காங்கேசன்துறை ஊடாக தங்கம் கடத்த முயன்ற 11 இந்தியர்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்தியர்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, குறித்த 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி செல்லத் தயாராக இருந்த 19 பயணிகளை நேற்று முன்தினம் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இதன்போது, அவர்களில் 11 பேர் தங்கத்தை மறைத்து கடத்த முயன்றமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும் நேற்று (27) மாலை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், சந்தேக நபர்கள் 11 பேரையும் எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil