Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கண்ணீர் விட்டு கதறிய சீமான்: வைரல் காணொளி: நான் வெல்வேன் என நினைத்தேன்

கண்ணீர் விட்டு கதறிய சீமான்: வைரல் காணொளி: நான் வெல்வேன் என நினைத்தேன்

நானே எதிர்பார்த்தேன். நான் வென்றுவிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அனைத்து இடங்களிலும் கட்டுப்பணத்தை பறி கொடுத்துள்ளது

காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான் கட்டுப்பணத்தை கூடப் பெற முடியாமல் 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டது நாதக கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்ச் சமூகத்தின் குரல்

இந்நிலையில் சீமான் ஆதங்கத்தோடு பேசும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில் பேசியுள்ள சீமான், "இவ்வளவு போராடியவர்களுக்கு, இவ்வளவு மாற்று அரசியலை எடுத்து வைத்தவர்களுக்கு இன்னும் 10 லட்சம் வாக்குகளை அளித்திருக்கலாம் என்ற வருத்தம் இருக்கிறது.

நான் சட்டசபைக்குள் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இல்லை. நாட்டை வெல்லாமல் 2, 3 சீட்டை வென்று என்ன ஆகப்போகிறது. ஆனாலும், போயிருக்கலாம்.

இந்த தமிழ்ச் சமூகத்தின் குரலாக சட்டசபையில் பேசியிருக்கலாம். ஆனால், அதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

மக்களின் தோல்வி

அது நம் தோல்வி இல்லை, மக்களின் தோல்விதான். என் பிள்ளைகளின் உழைப்பு அசாத்தியமானது. நானே எதிர்பார்த்தேன். நான் வென்றுவிடுவேன், இன்னும் ஐந்தாறு பேர் வெல்வோம் என நான் கணித்திருந்தேன்.

இன்றைக்கு இல்லையென்றாலும் நாளை செல்வோம். பெரும் பாடு பட்டுள்ளோம். இன்னும் 10 ஆண்டுகள் போராடியும் உறுதியாக வெற்றி பெறுவோம். அதில் எந்த மாற்றும் இல்லை.

எந்தக் காலத்திலும் தடம்பிறழ மாட்டோம். தன்னலத்திற்காக சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நமக்கு அப்படி ஒரு வெற்றி தேவையில்லை. நூறு விழுக்காடு மக்களை நம்புகிறோம். மக்கள் நம்பும் வரை போராடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil