Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கருணா குழு முகாமில் புலிகளை மிரள வைத்த மர்ம பொருள்

கருணா குழு முகாமில் புலிகளை மிரள வைத்த மர்ம பொருள்

டந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி பொலநறுவை மாவட்டத்தில் உள்ள சொருவில காட்டுப்பகுதியில் அமைந்திருந்த கருணா குழு முகாம்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கியமான ஒரு இரகசியம் வெளியாகி இருந்தது.அந்த முகாம் மீது தாக்குதல் நடத்திய புலிகள் கொல்லப்பட்டவர்களின் உடல்களை பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது.

கருணா குழு முகாமில் இந்தியாவிலிருந்து வந்த நால்வர்

கொல்லப்பட்டவர்களில் இருவர் இந்திய கடவுச்சீட்டுக்களையும் சாரதி அனுமதிப்பத்திரங்களையும் வைத்திருந்தார்கள்.அவர்கள் இருவரும் விஜயன்,ரவி என குறித்த ஆவணங்களில் காணப்பட்டன.அத்துடன் இந்தியாவில் இருந்து வந்த மேலும் இருவரும் அந்த முகாமில் தங்கியிருந்ததாகவும் அவர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

அந்த முகாமில் கொல்லப்பட்டவர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்ற ஈ.என்.டி.எல்.எவ் உறுப்பினர்கள் என பின்னர் தெரியவந்தது.இந்திய புலனாய்வு அமைப்பான றோவுடன் இணைந்து செயற்பட்டு வந்த ஈஎன்டிஎல்எவ் அமைப்பு கருணா குழுவுடன் சேர்ந்து செயற்பட்டு வந்த உண்மை உலகிற்கு உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம் என்று அதனைக் குறிப்பிடலாம்.

இவ்வாறு கருணா குழுவின் மீதான தாக்குதல் ஒருபுறம் நடந்து வந்த நிலையில் கருணா குழுவுடன் இணைந்து செயற்பட்ட அந்த குழு உறுப்பினர்கள் நால்வரை சுட்டுக்கொன்றுவிட்டு பின்னர் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த இருவர் கருணா தொடர்பில் வழங்கிய தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக அமைந்தது.

அவர்கள் வழங்கிய தகவல்கள் என்ன கருணா ஏன் அப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பதை விரிவாக ஆராய்கிறது இந்த உண்மைகள் நிகழ்ச்சி...

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil