Dailyhunt
கிளிநொச்சியில் பாரிய விபத்து : இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி!

கிளிநொச்சியில் பாரிய விபத்து : இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி!

கிளிநொச்சி - தர்மபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

பரந்தன் - முல்லைத்தீவு A35 வீதியில் தர்மபுரம் காவல் நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு (03-04-2026) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

10ம் வீதியால் சென்றுகொண்டிருந்த மோட்டர் கிரேடர் வாகனத்தின்மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இளைஞர்கள் உயிரிழப்பு

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 19 வயதான ஜெரின் கனிஸ்ரன் மற்றும் 18 வயதான தியாகராசா விக்கினேஸ்வரன் ஆகிய இளைஞர்களே உயிரிழந்தவர்களாவார்.

உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தர்மபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil