Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையேயான சண்டை

கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையேயான சண்டை

பர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தங்காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹகொட பகுதியில் நேற்று (28) இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.

மஹகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தங்காலை காவல் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதே இத்தாக்குதலுக்குக் காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

28 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil