Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொழும்பில் 12 மணி நேர நீர்வெட்டு - வெளியான அறிவிப்பு

கொழும்பில் 12 மணி நேர நீர்வெட்டு - வெளியான அறிவிப்பு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நீர்விநியோகத் தடையானது நாளை ( 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான 12 மணித்தியால காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள்

மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள், தெஹிவளை நீர் உந்து நிலையம் மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் நீர் உந்து நிலையம் ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான அனைத்துப் பகுதிகளில் இந்த நீர் விநியோகம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல.

மற்றும் நுகேகொட, நாவல,கொலன்னாவ, ஐனுர், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை,கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய இடங்களில் நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil