Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொழும்பில் அவசரமாக தரைஇறக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் போயிங் 777 விமானம்

கொழும்பில் அவசரமாக தரைஇறக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் போயிங் 777 விமானம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் ஒன்று தற்காலிகமாக சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால வெளியேற்றச் சறுக்கு (Emergency Evacuation Slide) எதிர்பாராத விதமாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சேவை இடைநீக்கம் செய்யபட்டுள்ளது.

G-YMMC என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட குறித்த விமானம், அடுத்த பயணத்திற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போயிங் 777-200ER ரக விமானம்

இதன்போது, விமானத்திற்கு அருகில் சிறிலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் உணவு விநியோக வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக விமானத்தின் அவசரகால வெளியேற்றச் சறுக்கு திறந்துள்ளது.

இதனால் விமானத்தின் தரைநிலை கையாளல் பணிகள் மற்றும் புறப்படுவதற்கான முன்னேற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, நவம்பர் 17ஆம் திகதி கொழும்பிலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்குப் பயணிக்கத் திட்டமிடப்பட்டிருந்த பிரிட்டிஷ் எயார்வேஸின் BA2044 விமானச் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளமை Flightradar24 விமானக் கண்காணிப்பு தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விமானம் கொழும்பிலிருந்து காலை 10.35 மணிக்குப் புறப்பட்டு, லண்டன் கேட்விக் விமான நிலையத்தை மாலை 5.00 மணியளவில் சென்றடையத் திட்டமிடப்பட்டிருந்தது.

இரத்துச் செய்யப்பட்ட விமானச் சேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த விமானம் G-YMMC என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட போயிங் 777-200ER ரக விமானம் என Flightradar24 தெரிவித்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil