Dailyhunt
லங்கா பிரீமியர் லீக் 2026 தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் 2026 தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு ஆரம்பம்

ங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 போட்டித் தொடரின் வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவுகள் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்த செயற்பாடு நாளை மறுநாள் (08) ஆரம்பமாகவுள்ளதோடு, எதிர்வரும் 18ஆம் திகதி வரை பதிவினை மேற்கொள்ளமுடியுமென இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.srilankacricket.lk மூலம் மேற்கொள்ளப்படுவதோடு இந்த இணைய வழிப்பதிவுகளை மேற்கொள்ள முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் நான்கு முக்கிய கிரிக்கெட் மைதானங்கள்

இம்முறை L.P.L போட்டிகளை நாட்டின் நான்கு முக்கிய கிரிக்கெட் மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, எஸ்.எஸ்.சி, ஆர். பிரேமதாச, பல்லேகெலே, தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடர் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil