Dailyhunt
மாதந்த எரிவாயு விலை மாற்றம் குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

மாதந்த எரிவாயு விலை மாற்றம் குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

நாட்டில் மே மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் உயர்ந்து வருவதுடன், அந்நிய செலாவணி விகிதங்களும் சவாலாக உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் தற்போதைய விலைகளைத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

எரிவாயு சிலிண்டர் விலைகள்

இதன்படி, தற்போது உள்ள எரிவாயுவின் விலைகள் தொடர்ந்தும் மே மாதத்திற்கு செல்லுபடியாகும் எனவும் மாற்றம் நிகலாது தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் பின்வருமாறு:

12.5 கிலோகிராம் சிலிண்டர் - ரூ. 4,765

5 கிலோகிராம் சிலிண்டர் - ரூ. 1,910

2.3 கிலோகிராம் சிலிண்டர் - ரூ. 890

மேலும், பொருளாதார அழுத்தங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நுகர்வோருக்கு தற்காலிக நிவாரணமாக இந்த முடிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil