Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மட்டக்களப்பில் சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த தாய் கைது!

மட்டக்களப்பில் சிறுமிக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த தாய் கைது!

ட்டக்களப்பு - செங்கலடி பிரதேசத்தில் 11 வயது சிறுமிக்கு இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது நேற்று செவ்வாய்க்கிழமை (5) இரவு கைது செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலை அனுமதித்துள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

செங்கலடி கணேசபுரம் பகுதியில் இருந்து சம்பவ தினமான நேற்று இரவு காவல்துறை அவசர சேவை இலக்கத்துக்கு கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து காவல்துறையினர் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

நீதிமன்றில் முன்னி

இதன்போது அங்கு 11 வயது சிறுமி மீது தாயார் இரும்பு கரண்டியை நெருப்பில் சூடாக்கி அதனை குழந்தையின் கையில் வைத்து சித்திரவதை செய்துள்ளதையடுத்து சிறுமியின் தாயாரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட தாயாரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil