மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம் தனது கால்பந்து உலகக் கோப்பைக்கான டிக்கெட்டை அந்த நாட்டின் பூர்வகுடியைச் சேர்ந்த வீராங்கனை யோலெட் செர்வாண்டஸுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.இவரின் இந்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணமுள்ளன.
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற இருக்கிறது.முதல்போட்டி மெக்சிகோவில் தென்னாபிரிக்க அணியும் மெக்சிகோவும் மோதுகின்றன.
பூர்வகுடி வீராங்கனைக்கு கிடைத்த அதிஷ்டம்
இந்தப் போட்டியைப் பார்க்க ஜனாதிபதி தனது டிக்கெட்டை 21 வயதான பூர்வகுடி வீராங்கனைக்கு வழங்கியுள்ளார். மெக்சிகோ அரசாங்கம் நடத்திய போட்டியில் வென்ற பூர்வகுடி பெண்ணுக்கு இந்தப் பரிசு அந்த நாட்டின் ஜனாதிபதியின் கையால் வழங்கப்பட்டுள்ளது.
இவருடன் மேலும் 3 பேருக்கும் இதுமாதிரியான டிக்கெட்டுகள் பரிசளிக்கப்பட்டுள்ளன. வெராக்ரூஸ் பகுதியைச் சேர்ந்த இந்த செர்வாண்டெஸ் குவாகேகுவா என்ற பழங்குடியினப் பெண், பாரம்பரிய உடையணிந்து, காலணிகள் இன்றி கால்பந்தைக் கட்டுப்படுத்தி அசத்தியதன் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்றார்.
இவர்கள் மெக்சிகோவின் பெருமை
இது குறித்து மெக்சிகோ ஜனாதிபதி, "இவர்கள் மெக்சிகோவின் பெருமை. அவர்கள் அதிபர்களையோ, அரசாங்கத்தின் தலைமையையோ பிரதிநிதித்துவம் செய்யவில்லை, அவர்கள் மெக்சிகோவை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்.

இளம் பெண் கால்பந்து விளையாடுவது நமது நாட்டை பிரதிநிதித்துவம் செய்வதில் சிறந்த விஷயமாகும். சில பேர் மட்டுமே தொடக்க விழாவில் பங்கேற்க முடியும் என்பதால் இது அவர்களுக்கு பெருமைக்குரியது என்றார்.

