Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முதல்வர் விஜய்யின் அதிகாரப்பூர்வ கூட்டத்தில் தனியார் நபர்கள்! நடவடிக்கை கோரும் பா.ஜ.க

முதல்வர் விஜய்யின் அதிகாரப்பூர்வ கூட்டத்தில் தனியார் நபர்கள்! நடவடிக்கை கோரும் பா.ஜ.க

மிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், எந்தவித அதிகாரப்பூர்வ அரசுப் பதவியும் வகிக்காத இரண்டு தனியார் நபர்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பா.ஜ.கவின் தமிழகப் பிரிவு தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை அணுகி இந்த விடயம் குறித்து கலந்தாலோசிய நிலையில் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

தமிழக பா.ஜ.கவின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மற்றும் மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோருடன் ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாகேந்திரன், "தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் அர்லேகரிடம் நான் மனு அளித்துள்ளேன்," என்று கூறியுள்ளார்.

உரிய சட்ட நடவடிக்கை

லோக் பவன் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, சமீபத்தில் நிறைவடைந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த இரு நபர்களும் அமைச்சர்களுடன் கலந்துகொண்டதை சட்டவிரோதச் செயல் மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழியை மீறிய செயல் எனக் குறிப்பிட்டு, பா.ஜ.கவின் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கூறப்படும் இந்த அத்துமீறலை பா.ஜ.க பிரதிநிதிகள் குழு வன்மையாகக் கண்டித்ததுடன், உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை வலியுறுத்தியதாகவும் அந்த செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர் விஜய்க்கு அறிவுரை வழங்குமாறு ஆளுநர் அர்லேகரை அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil