Dailyhunt
நாடு முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட அதிபர் பணியிட வெற்றிடங்கள்! கல்வி அமைச்சு அறிவிப்பு

நாடு முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட அதிபர் பணியிட வெற்றிடங்கள்! கல்வி அமைச்சு அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000க்கும் மேற்பட்ட அதிபர்களுக்கான பணியிடங்கள் வெற்றிடமாக இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "வெற்றிடமாக உள்ள அதிபர் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து நியமிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

பரீட்சைத் திணைக்களம்

பாடசாலைகளின் நிர்வாகம் மற்றும் கல்வித் தரம் மேம்படுவதற்காக இந்த நியமனங்கள் அவசியமானவை.

மேலும், அதிபர் பதவிக்கான போட்டித் தேர்வு பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு இத்தேர்வை விரைவாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை பரீட்சைத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றன.

கல்வி துறையில் நிலவும் இந்த பணியாளர் பற்றாக்குறை, பாடசாலைகளின் நிர்வாக திறன், மாணவர் வழிகாட்டல், மற்றும் கல்வி தரம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், இதற்கான விரைவான தீர்வு அவசியமாகியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நிர்வாக நிலைத்தன்மை ஏற்பட்டு, கல்வி தரத்தில் முன்னேற்றம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil