Dailyhunt
நாம் முடங்கிப் போக நாமே அனுமதிக்க வேண்டாம்! உலக அமைதிக்கு பேப் அழைப்பு

நாம் முடங்கிப் போக நாமே அனுமதிக்க வேண்டாம்! உலக அமைதிக்கு பேப் அழைப்பு

லகம் முழுவதும் பரவிவரும் மோதல்களின் வீச்சைக் கண்டு மக்கள் உணர்ச்சியற்றுப் போக வேண்டாம் என்றும், அமைதிக்காகப் பாடுபட வேண்டும் என்றும் போப் லியோ வலியுறுத்தியுள்ளார்.

"போர், அநீதி மற்றும் மக்களையும் நாடுகளையும் தனிமைப்படுத்துவதன் மூலம், அவநம்பிக்கையும் அச்சமும் நமக்கிடையேயான பிணைப்புகளைத் துண்டிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரின் வெளிப்படையான விமர்சகராக உருவெடுத்துள்ள லியோ, கத்தோலிக்க நாட்காட்டியின் மிகப்புனிதமான இரவில், இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று திருவிவிலியம் கூறுவதாக சுட்டிக்காட்டியதாக சில ஊடகங்கள் அடிகோடிட்டுள்ளன.

சனிக்கிழமை இரவுத் திருப்பலி

இவ்வேளையில் புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்ற சனிக்கிழமை இரவுத் திருப்பலியில், "நாம் முடங்கிப் போக நாமே அனுமதிக்க வேண்டாம்" என்று முதல் அமெரிக்கத் திருத்தந்தையான போப் மன்றாடியுள்ளார்.

இருப்பினும், போப் தனது ஆராதனையின் போது எந்தவொரு குறிப்பிட்ட மோதல்களையும் குறிப்பிடவில்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil