Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாட்டில் அதிகரிக்கும் எரிபொருள் விலை: அரச தரப்பில் வெளியான காரணம்

நாட்டில் அதிகரிக்கும் எரிபொருள் விலை: அரச தரப்பில் வெளியான காரணம்

தற்போதைய ஆட்சியின் கீழ் நாட்டில் எரிபொருள் விலைகள் உயர்வடைவது என்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தின் ஊழல், மோசடி அல்லது வீணடிப்புகள் காரணமாக இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி (Chandana Sooriyarachchi) இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச சந்தை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தற்போதைய எரிபொருள் விலைத் திருத்தங்களுக்கு சர்வதேச சந்தையில் நிலவும் விலை மாற்றங்களே நேரடி காரணியாக அமைந்துள்ளன.

உலகளவில் நிலவும் போர்ச் சூழல்கள் காரணமாக அமைதியான சூழல் குலைந்துள்ளமை, கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் இறக்குமதிச் செயல்பாடுகளின் போது டொலருக்கு நிகரான செலவினங்கள் அதிகரித்துள்ளமை ஆகியவையே உள்ளூர் சந்தையில் விலை உயர்விற்கு முக்கிய காரணங்களாகும்.

உலகளவில் இவ்வாறான பாரிய சவால்கள் நிலவியபோதிலும் நாட்டிற்குள் நெருக்கடி நிலைமை உருவாகாதவாறு அரசாங்கம் பார்த்துக்கொண்டுள்ளது.

மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் நாட்டிற்குள் ஒரு மணிநேரமேனும் எரிபொருள் இல்லாத நிலைமை உருவாக்கப்படுவதற்கு தற்போதைய அரசாங்கம் இடம் வழங்கிடவில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil