Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உரிமையாளருக்காக காத்துக்கிடக்கும் நாய்

நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உரிமையாளருக்காக காத்துக்கிடக்கும் நாய்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காணாமல் போன தனது உரிமையாளருக்காக அடித்துச் செல்லப்பட்ட வீடு இருந்த இடத்தைவிட்டு நகராமல் வளர்ப்பு நாய் ஒன்று காத்திருக்கும் காட்சி பார்ப்போரை கலங்கச் செய்துள்ளது.

இந்த வெள்ளத்தில் திரிசூலி பஜார் பகுதியில் இருந்த நான்கு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. அந்த நான்கு வீடுகளில் இருந்தவர்களும் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

நகர மறுத்து தனது உரிமையாளருக்காக காத்திருக்கும் காட்சி

இடிபாடுகளுக்கு மத்தியில் சேற்றில் அமர்ந்திருக்கும் வெள்ளை - கருப்பு நிற நாய் ஒன்று, அந்த இடத்தைவிட்டு நகர மறுத்து தனது உரிமையாளருக்காக காத்திருக்கும் காட்சிகள் காண்போரைக் கலங்க வைத்துள்ளது.

ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அப்பகுதியில் உள்ள இடிபாடுகளையும் சேறு, சகதிகளையும் பணியாளர்கள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் அந்த இடத்தைவிட்டு நகர மறுத்து அமர்ந்திருக்கிறது வளர்ப்பு நாய்.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் விக்ரம் தாபா என்பவர் "நாங்கள் பிஸ்கட் கொடுத்துப் பார்த்தோம், பலவிதமான செல்லப் பெயர்களைச் சொல்லி அழைத்தோம், ஆனால் அது தலையைக்கூடத் திருப்பவில்லை.அது இந்த இடத்தை விட்டு நகராமல் உள்ளது" என்றார்.

சாப்பிட மறுக்கும் நாய்

சரியாக சாப்பிட மறுக்கும் நாய், வீடு இருந்த பகுதியையே சுற்றி, உரிமையாளரைத் தேடி வருவது பார்ப்போரை கலங்க வைத்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil