Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தோண்டி எடுக்கப்பட்டு சுற்றில் வீசியெறிப்பட்ட கண்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தோண்டி எடுக்கப்பட்டு சுற்றில் வீசியெறிப்பட்ட கண்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலை தொடர்பில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் தகவல்கள், இதற்குப் பின்னால் ஒரு மாபெரும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் வலையமைப்பு சதித்திட்டம் இருப்பதை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

சக்திவாய்ந்த அரசியல்வாதிகளின் ஆதரவுடன் செயல்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மீது முந்தைய அரசாங்கங்கள் படிப்படியாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலால் வெடித்த துயரச் சம்பவம், கடந்த காலங்களில் நடந்த வேறு எந்தச் சம்பவத்தையும் போல் இல்லை என்று பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சிறை அதிகாரிகளுக்குத் தகவல் அளிப்பதாகக் கூறி, ஒரு குழுவினர் திட்டமிட்டு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, முன்தினம் (05) இரு கைதிக் குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்தத் தாக்குதலில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டனர். மற்றும் சுமார் 30 பேர் காயமடைந்தனர்.

நேற்று (06) காலை சிறைச்சாலை வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தது, மேலும் மோதலுக்குக் காரணமான குழுக்களிடமிருந்து தேவையற்ற அச்சம் அல்லது கோபத்தைத் தடுப்பதற்காக, சாதாரண உடையில் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் அவர்களும் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துயரச் சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு மட்டுமல்ல. அது இலங்கையின் சிறைச்சாலை நிர்வாக அமைப்பும், ஒட்டுமொத்த அரச நிர்வாகமும் எந்த அளவிற்கு சீரழிந்துள்ளன என்பதை வெளிக்காட்டும் கண்ணாடியாக மாறியுள்ள நிலையில் இந்த விடயம் குறித்து விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil