Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நொடியில் மண்ணுக்குள் புதைந்த நேபாளம்: காணாமல் போன பிரித்தானியர்கள் தொடர்பில் தகவல்

நொடியில் மண்ணுக்குள் புதைந்த நேபாளம்: காணாமல் போன பிரித்தானியர்கள் தொடர்பில் தகவல்

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 33 பிரித்தானிய குடிமக்களில் யாரும் மீட்கப்படவில்லை என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

பேரிடரில் காணாமல் போன ஆஸ்திரேலியர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் சிறிதளவு அதிகரித்து வருகிறது. இன்று, 43 ஆஸ்திரேலியர்கள் காணாமல் போயிருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

"அந்த ஆஸ்திரேலியர்களைப் பத்திரமாகவும் நலமாகவும் மீட்க முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் கைவிடவில்லை என்று வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மாட் திஸ்டில்வெயிட் ஏபிசி-யிடம் தெரிவித்தார்.

தேடும் பணிகள்

நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவில் குறைந்தது 794 பேர் உயிரிழந்ததாகவும், 2,500க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட ஒரு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இதுவரை குறைந்தது 289 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள சுற்றுலா துறை தெரிவித்துள்ளது

மீட்கப்பட்டவர்களில் 180 இந்தியக் குடிமக்கள், 89 சீனர்கள், பல்கேரியா மற்றும் போர்ச்சுகலைச் சேர்ந்த தலா ஒருவர், இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஐரோப்பாவைச் சேர்ந்த பலரும் அடங்குவர்.

"சிக்கித் தவிப்பவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பிற வழிகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும், தேடும் வெளியேற்றும் மற்றும் உதவிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று நேபாள சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

வெள்ள அபாயம்

போதேகோஷி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் குடியிருப்பாளர்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil