Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரஷ்யாவை ஆட்டம் காணவைக்கும் உக்ரைன் : அதிகாலைவேளை எண்ணெய் கட்டமைப்பை பதம் பாரத்த ட்ரோன்கள்

ரஷ்யாவை ஆட்டம் காணவைக்கும் உக்ரைன் : அதிகாலைவேளை எண்ணெய் கட்டமைப்பை பதம் பாரத்த ட்ரோன்கள்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்தில் உள்ள எண்ணெய் முனையம் மீது இன்று சனிக்கிழமை அதிகாலையில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ், நகரம் ஒரு பெரிய அளவிலான உக்ரைனிய ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், வான் பாதுகாப்புப் படைகள் 72 ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும் கூறினார். பீட்டர்ஹோஃப் பகுதியில் ஒரு ஆளில்லா விமானம் விழுந்து நொருங்கியது.

எண்ணெய் முனையம் மீது தாக்குதல்

"நகரின் கிரோவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள எண்ணெய் முனையயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின்னரான பகுதிகள் சீரமைக்கப்பட்டுவிட்டன. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை," என்று பெக்லோவ் கூறினார்.

இதற்கிடையில், ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரத்திற்கு அருகிலுள்ள எண்ணெய் உள்கட்டமைப்பு மீதான தாக்குதலை உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார்.

உறுதிப்படுத்திய உக்ரைன் ஜனாதிபதி

"ரஷ்யாவின் போருக்கு வருவாய் ஈட்டித் தரும் துறைமுக எண்ணெய் உள்கட்டமைப்பை உக்ரைனின் பாதுகாப்புப் படைகள் தாக்கின. மேலும், ஒரு முக்கிய இராணுவ இலக்கான க்ரோன்ஸ்டாட் மீதும் வெற்றிகரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

உக்ரைனின் எல்லையிலிருந்து இதன் தூரம் 850 கிலோமீட்டருக்கும் அதிகமாகும்," என்று அவர் சமூக ஊடக நிறுவனமான X-இல் எழுதியிருந்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil