Dailyhunt
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் : பொறுப்பேற்க மறுக்கும் ஈரான்

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் : பொறுப்பேற்க மறுக்கும் ஈரான்

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது கடந்த மார்ச் 3 ஆம் திகதி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மறுத்துள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று அது குற்றம் சாட்டியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை விட இந்தத் தாக்குதல் அதிக சேதத்தை ஏற்படுத்தியதாக 'த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்' செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்துள்ளது.

பல மணி நேரம் நீடித்த தீ

சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த சம்பவத்தை சிறிய சேதத்துடன் கூடிய ஒரு குறுகிய தீ விபத்து என்று விவரித்தாலும், இந்தத் தீ பல மணி நேரம் நீடித்ததாகவும், குறிப்பிடத்தக்க அழிவை ஏற்படுத்தியதாகவும் அந்த அறிக்கை கூறியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையை நிராகரித்த IRGC, இந்தத் தாக்குதலுக்கு "ஈரானிய ஆயுதப் படைகளுடன் முற்றிலும் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறியதுடன், இஸ்ரேலின் பிராந்திய உத்தியைக் கருத்தில் கொண்டு, இது "நிச்சயமாக சியோனிஸ்டுகளால் நடத்தப்பட்டது" என்றும் கூறியது.

பிராந்தியத்தில் சியோனிச ஆட்சியின் கலகச் செயல்பாடு குறித்து முஸ்லிம் நாடுகளை எச்சரித்ததோடு, "பிராந்தியத்தைச் சீர்குலைத்து அழிக்கும் அமெரிக்க-சியோனிச இயக்கத்தின் கலக நோக்குக்கு எதிராக" அதன் அண்டை நாடுகள் விழிப்புடன் இருப்பது அவசியம் என வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil