அமெரிக்காவைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட சர்வதேசச் சட்ட வல்லுநர்கள், தற்போது நடைபெற்று வரும் ஈரான் போர் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளனர்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள், சர்வதேசச் சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவை போர்க்குற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னணிப் பேராசிரியர்கள்
ஜஸ்ட் செக்யூரிட்டி (Just Security) மன்றத்தால் வெளியிடப்பட்ட இந்தக் கடிதத்தில் முன்னணிப் பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தப் போர் தொடங்கப்பட்டதே ஐக்கிய நாடுகள் சாசனத்தின் (UN Charter) தெளிவான மீறலாகும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அமெரிக்கப் படைகளின் செயல்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

