Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரான எரான்! சஜித் தரப்பின் அதிரடி முடிவு

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரான எரான்! சஜித் தரப்பின் அதிரடி முடிவு

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்காலத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினர் பதவியிலிருந்து விலகுமாறு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் செயற்குழு மற்றும் மேலாண்மைக் குழு பதவிகளில் இருந்து எரான் விக்கிரமரத்னவின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தற்போது அவரை கட்சியிலிருந்தும் முழுமையாக வெளியேறுமாறு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் விளையாட்டுத் துறை சார்ந்த நிர்வாக அமைப்புகளில் பதவிகளை வகிக்கக் கூடாது என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை முடிவுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிர்வாக சீர்திருத்தங்கள்

இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பில் நிர்வாக மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

இது ஒரு இடைக்காலக் குழுவல்ல எனவும், புதிய தேர்தல் நடத்தப்படும் வரை நீண்டகால மாற்றங்களை முன்னெடுக்கும் ஒரு சுயாதீனக் குழுவாக செயற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil