Dailyhunt
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!

சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!

ரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) சுரேஷ் சலே, தாம் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) அவர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அந்த நடவடிக்கையைச் சவாலுக்குட்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை அவர் முன்னெடுத்துள்ளார்.

விரைவில் விசாரணை

இந்த மனுவில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, அருட்தந்தை ரோஹன் சில்வா மற்றும் சட்ட மா அதிபர் ஆகிய தரப்பினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக உரிய தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil