பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (29) தேர்த்திருவிழா இடம்பெற்றது.
9 ஆவது நாள் திருவிழாவான நேற்று வெள்ளிக்கிழமை (29) பஞ்சரத பவனி காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து ஆசியாவின் மிகவும் பழமையானதும்,மிக பெரியதுமான சோமாஸ் கந்த மூர்த்தி மற்றும் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பஞ்சரத தேரிலே உற்சவ மூர்த்திகள் ஆறோனிக்கப்பட்டதை தொடர்ந்து திருத்தேர் வீதி உலா இடம் பெற்றது.
தேர் வீதி உலா
குறித்த தேர் வீதி உலாவில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

வீதி இடம் பெற்றதை தொடர்ந்து சுவாமி பஞ்சை சாத்தப்பட்டு மீண்டும் வசந்த மண்டபத்தில் அடைந்து குறிப்பிடத்தக்கது.

