Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உயர்தர பரீட்சை : பரீட்சைகள் திணைக்களம் விதித்துள்ள தடை

உயர்தர பரீட்சை : பரீட்சைகள் திணைக்களம் விதித்துள்ள தடை

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் ஓகஸ்ட் 04 ஆம் திகதி நள்ளிரவுக்குள் முடிக்கப்பட வேண்டும் எனத் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும்.

யூக கேள்வி வினாத்தாள்களை வெளியிடக்கூடாது

அந்தக் காலகட்டத்தில், உயர்தர பரீட்சைக்கான யூகக் கேள்விகளைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிக்கக் கூடாது.

மேலும், பரீட்சை வினாத் தாள்களுக்குக் கேள்விகள் வழங்கப்படும் அல்லது அதுபோன்ற கேள்விகள் வழங்கப்படும் என்று குறிப்பிடும் சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், மின்னணு அல்லது அச்சு ஊடகங்களை வெளியிடுவதோ அல்லது அதுபோன்றவற்றை வைத்திருப்பதோ கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை, ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05, 2026 வரை 2532 பரீட்சை நிலையங்களில் நடைபெற உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil