Dailyhunt
வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டம் : நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியம்

வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டம் : நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியம்

IBC தமிழ் 0 months ago
Courtesy: நயன்

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் தொழிற்சங்க ஆர்பாட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்றைய தினம் (04) சென்ற நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று மருந்து கட்டுதல் மற்றும் ஊசி போடும் நடவடிக்கைகள் இடம் பெற்றதோடு, அவசர நோயளர்களை விடுதியில் அனுமதிக்கும் நடவடிக்கை மாத்திரமே இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோயளர்களை விடுதியில் அனுமதிக்கும் நடவடிக்கை

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (04) மருந்து கட்டுதல் மற்றும் ஊசி போடும் நடவடிக்கைகள் இடம் பெற்றதோடு,அவசர நோயளர்களை விடுதியில் அனுமதிக்கும் நடவடிக்கை மாத்திரமே இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், வைத்தியசாலையில் வேறு எந்த வைத்திய சேவைகளும் இடம் பெறாத நிலையில் சிகிச்சைக்காக வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

வேறு எந்த வைத்திய சேவைகளும் இடம் பெறாததனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் தூர இடங்களில் இருந்துவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என பலதரப்பட்டவர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு தொடர்ச்சியாக வைத்தியர்களின் இவ்வாறான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil