ருவன்வெல்ல, பதுபிட்டியாவில் உள்ள ஒரு வாகன சேவை மையத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக ருவன்வெல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், அங்கு பணிபுரிந்த கயன் உதயங்கா என்ற 18 வயது இளைஞர் ஆவார்.
முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் ஒரு முச்சக்கர வண்டியைக் கழுவி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, தண்ணீரில் மின்சாரம் கசிந்ததால் மின்சாரம் தாக்கியது தெரியவந்துள்ளது
மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்த விடயம்
விபத்துக்குப் பிறகு அந்த இளைஞர் கரவனெல்ல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே அவர் இறந்துவிட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து ருவன்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

