Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வளைகுடாவில் அமெரிக்க இராணுவத்தால் ஏற்பட்டுள்ள சூழல்! ஐநாவில் எதிரொலித்த குரல்

வளைகுடாவில் அமெரிக்க இராணுவத்தால் ஏற்பட்டுள்ள சூழல்! ஐநாவில் எதிரொலித்த குரல்

ளைகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் பிராந்தியத்திற்குப் பாதுகாப்பின்மையைத் தவிர வேறொன்றையும் கொண்டுவருவதில்லை என்று ஐநாவுக்கான ஈரானின் தூதர் அமீர்-சயீத் இரவானி தெரிவித்துள்ளார்.

ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, ஈரானிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்குக் கடலோர எல்லைகள் எதுவும் இல்லை என்றும், அது அவர்களின் கடல் பகுதியோ அல்லது அவர்களின் அண்டைப்பகுதியோ அல்ல என்றும் இரவானி கூறியுள்ளார்.

கடுமையான விதிமீறல்கள்

இதேவேளை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, பிராந்தியத்தில் நிலவும் வன்முறை மற்றும் ஸ்திரமற்ற தன்மைக்குத் தெஹ்ரான் மீது அநியாயமாகப் பழி சுமத்துவதாகப் பாதுகாப்புக் கவுன்சிலின் மேற்கத்திய உறுப்பு நாடுகளையும் பஹ்ரைனையும் இரவானி குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய நெருக்கடியின் மூல காரணத்தைக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஈரானுக்கு எதிராக இழைக்கப்பட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை இந்த நாடுகள் மறைத்து, கடுமையான விதிமீறல்களுக்கு மத்தியில் மௌனம் காப்பதுடன், பழியைப் பாதிக்கப்பட்டவர் மீது சுமத்த முயல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil