Dailyhunt
வளைகுடாவில் போர் விமானமொன்றை சுட்டு வீழ்த்திய ஈரான்!

வளைகுடாவில் போர் விமானமொன்றை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ளைகுடா பகுதியில் பறந்துகொண்டிருந்த எதிரி நாட்டுப் போர் விமானம் ஒன்றை, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிகாரப்பூர்வமாக உரிமை கோரியுள்ளது.

ஈரானின் கெஷ்ம் தீவுக்கு (Qeshm Island) தெற்கே வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அந்தப் போர் விமானத்தை, ஈரானிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் இலக்கு வைத்துத் தாக்கியுள்ளன.

தாக்கப்பட்ட அந்தப் போர் விமானம், ஹெங்காம் தீவு (Hengam Island) மற்றும் கெஷ்ம் தீவு ஆகியவற்றிற்கு இடையே உள்ள வளைகுடா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு

சுட்டு வீழ்த்தப்பட்ட அந்தப் போர் விமானம் எந்த நாட்டிற்குச் சொந்தமானது அல்லது அந்த விமானத்தில் எத்தனை வீரர்கள் இருந்தனர் என்பது குறித்த விபரங்களை ஈரான் தனது அறிக்கையில் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

இருப்பினும், இப்பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள சூழலில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil