Dailyhunt
வான் பாதுகாப்பு கல்லூரியின் தளபதியையும் இழந்தது ஈரான்

வான் பாதுகாப்பு கல்லூரியின் தளபதியையும் இழந்தது ஈரான்

மெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஈரானிய மூத்த இராணுவத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை வெளியான ஈரானிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட தளபதி, ஷாஹின் ஷஹரில் உள்ள இராணுவத்தின் வான் பாதுகாப்பு கல்லூரியின் தலைவரான பிரிகேடியர் ஜெனரல் மசூத் ஜரேய் என அடையாளம் காணப்பட்டதாக ஈரானிய மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் மத்திய பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்

ஈரானின் மத்திய பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இப்பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில், அப்போதைய உச்ச தலைவர் அலி கமேனி உட்பட இதுவரை 1,340-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil