Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் பூஜித

வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் பூஜித

ஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதற்காக குற்றவாளி என இனம்காணப்பட்டு மரண்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வாறு (01) வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபரை அவரது வழக்கறிஞர் றொசான் தெகிவள சந்தித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்காக முன்னிலையான வழக்கறிஞர் றொசான் தெகிவள, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.

அதன்படி, அடுத்த வாரம் மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.

பூஜித ஜெயசுந்தரவின் உடல்நிலை

மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து 28 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால், தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் கூறினார்.

பூஜித ஜெயசுந்தரவின் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் தற்போது நல்ல உடல்நிலையில் இருப்பதாக வழக்கறிஞர் பதிலளித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil