Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
யாழ். திருவள்ளுவர் மண்டப விவகாரத்தில் வெளிவரும் ஜேவிபியின் இனவாதம்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

யாழ். திருவள்ளுவர் மண்டப விவகாரத்தில் வெளிவரும் ஜேவிபியின் இனவாதம்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தினை மத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வது ஜேவிபியின் இனவாதத்தின் உண்மை முகம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ் காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சாரம்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ் மக்களுக்காக யாழ் மாநகர சபைக்கு சொந்தமாக இந்திய நிதி உதவியின் கீழ் கட்டப்பட்டதிருவள்ளுவர் பண்பாட்டு மையம் தமிழ் மக்களுக்கு தனியான ஒரு அடையாளம்.

இந்த அடையாளத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக புத்தசாசன அமைச்சையும் இணைத்து மத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வது தேசிய மக்கள் சக்தி என்கின்ற போர்வையை போட்டுள்ள ஜேவிபியின் இனவாதத்தின் உண்மை முகம்.

ஏனெனில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான மத மற்றும் கலாச்சார அடையாளங்களை அழிப்பதிலும் திரிவு படுத்துவதிலும் புத்த சாசன அமைச்சு அதன் கீழ் உள்ள தொல்பொருள் திணைக்களத்தின் மூலம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

ஜேவிபியின் உண்மை முகம்

இந்த அனைத்து செயற்பாடுகளுக்கும் தேசிய மக்கள் சக்தி பூரண ஆதரவை வழங்கி வருவதோடு ஜேவிபியின் சித்தாந்தத்தை தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு தொடர்ச்சியாகவே திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை தமிழ் மக்களிடமிருந்து பிரிப்பதற்காக நம்பிக்கை பொறப்பு நிதியம் என்ற போர்வையில் புத்த சாசன அமைச்சை உள்வாங்கி உள்ளது.

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான மாகாண அதிகாரங்களுக்கு கீழ் உள்ள கட்டமைப்பு ஒன்றினை மத்தியின் அதிகார வரம்புக்குள் உள் ஈர்ப்பது எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் தமிழ் மக்களும் தமிழ் தேசிய அரசியல் வாதிகளும் விழிப்பாக இருப்பதுடன் ஜேவிபியின் உண்மை முகம் தொடர்பில் மக்களும் விழிப்படைய வேண்டும்" என்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil