Dailyhunt
யாழ்ப்பாணத்தை விஜய்யிடம் கொடுங்கள்..! சபையில் அநுரவிடம் முழக்கமிட்ட அர்ச்சுனா எம்.பி

யாழ்ப்பாணத்தை விஜய்யிடம் கொடுங்கள்..! சபையில் அநுரவிடம் முழக்கமிட்ட அர்ச்சுனா எம்.பி

மிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கேட்டது போல கச்சத்தீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும் சேர்த்து தமிழ்நாட்டிடம் இந்த அரசாங்கம் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்றைய (05-05-2026) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழ் மக்களின் இதயத்தைக் கவர்ந்த தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் விஜய்க்கு ஒரு அடக்கப்பட்ட தமிழன் என்ற வகையில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவை விஜய் கேட்டார் என்ற போது அதனைத் தர முடியாது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

ஆனால், நாங்கள் கூறுகின்றோம் கச்சத்தீவை மாத்திரம் அல்ல முழு யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு எழுதிக் கொடுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "தமிழ்நாட்டு மக்கள் எங்களைப் பார்த்துக் கொள்வார்கள்" என அர்ச்சுனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil