Dailyhunt
தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் சங்கம் சார்பில் மே தினத்தை முன்னிட்டு  முப்பெரும் விழா

தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் சங்கம் சார்பில் மே தினத்தை முன்னிட்டு  முப்பெரும் விழா

Ilamkural News 0 years ago

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பாடி மேம்பாலம் அருகே மே  தினத்தை முன்னிட்டு தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் சங்கம் சார்பில்  சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் விழிப்புணர்வு இருசக்கர வாகன விழிப்புணர் பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு பேரணியை அம்பத்தூர் உதவி ஆணையர் பிராங்டி ரூபண் மற்றும் கொரட்டூர் ஆய்வாளர் தங்கம்.விஜயகுமார் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

 இந்த பேரணியில் 500 பேர் கலந்துக்கொண்ட தலைக்கவசம் அணிந்தவாறு விழிப்புணர்வு இரு சக்கர பேரணி நடைபெற்றது

சிறப்பு விருந்தினராக  தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு  ஊழியர்களுடன்  வாகன பேரணியில் கலந்துக்கொண்டார்.

பேரணியானது டிவிஎஸ் லூக்காஸ் நிறுவன வளாகத்தில் தொடங்கி பாடி மேம்பாலம் வழியாக சுமார் இரண்டு கிலோமீட்டர் சென்று  கொரட்டூரில் முடிவடைந்தது. 

இரு சக்கர வாகன பேரணியில் பங்குபெற்ற தொழிலாளர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் அணிவது குறித்த விழிப்புணர்வுவிழிப்புணர்வு  பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணி கொரட்டூர் கிரன் மஹாலில் வரை சென்று பிறகு தேசிய இன்ஜினியரிங் பணியாளர்கள் சங்கம் சார்பில் மே தினத்தை முன்னிட்டு  முப்பெரும் விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் சுமார் 2000 தொழிலாளர்கள் கலந்து கொண்டானர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ilamkural News