JOURNALIST NEWS

@journal8092885697043

20 Mar 2022.1:16 PM

5.3k Views
Coimbatore , Tamil Nadu

மண்ணை வளமாக்கும் புதிய டெக்னாலஜி ஜீவா கருவி அறிமுகம். விஞ்ஞானி பங்கேற்பு.

கோவை. மார்ச்.16-

நீர் மேலாண்மையில் புதிய கண்பிடிப்பும், நீரின் தரத்தை அதிகரித்து மகசூலை பெருக்கும் வகையிலான புதிய டெக்னாலஜி ஜீவா கருவி கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

பெருகி வரும் மக்கள் தொகையில் செயற்கை உரங்கள்,பிளாஸ்டிக் பயன்பாடு என இயற்கை குறித்த போதிய கவனிப்பின்மையால் பெரும்பாலான இடங்களில், நீர் மற்றும் மண் மாசடைந்து வருகிறது.

இதனால் விவசாயத்தில் விளைச்சலும் பாதிப்படைந்து வரும் நிலையில், போர்த் பேஸ் வாட்டர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனரும்,பிரபல இந்திய நீர் மேலாண்மை விஞ்ஞானியுமான கிருஷ்ண மாதப்பா "ஜீவா" எனும் கருவியை உருவாக்கி நீர் மேலாண்மையில் புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நலையில் ஜீவா கருவி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.

இதில் நிறுவனத்தின் இயக்குனர் சீனிவாசன் கூறியதாவது:

தூய்மையான மற்றும் ஆற்றல்மிக்க தண்ணீருக்காக ஜீவா என்னும் புதிய கருவியை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த கருவியை உள்நாட்டில் தயாரிக்கப்படும் பம்ப் மற்றும் பைப்புக்களில் எளிதாக பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி வழியாக செல்லும் சாதாரண தண்ணீர் மூன்று படி நிலைகளில் தண்ணீரை ஆற்றல்மிக்கதாக மாற்றும் செயல்முறையை மேற்கொள்கிறது .

அது தண்ணீரில் இருக்கும் எந்த அழுத்தத்தையும் குறைத்து ஆற்றல் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

மேலும் தண்ணீரை அதன் இயற்கையான மற்றும் ஊட்டச்சத்து நிலைக்கு மாற்றுகிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகளை சந்தித்து பேசியதில், பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும் நீர் மிகவும் மாசுபட்டுள்ளாது, மோசமானதாகவும் , தரமற்றதாகவும் இருக்கிறது. இந்த நிலையில் ஜீவா கருவி பயன்படுத்தியதில் விவசாய பொருட்களில் மகசூல் அதிகரித்து இருப்பதோடு,மண் மற்றும் வேர்களில் நல்ல மாற்றம் தெரிவதாக விவசாயிகள் நம்பிக்கை தெரித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்
Disclaimer

Disclaimer

This content has been published by the user directly on Dailyhunt, an intermediary platform. Dailyhunt has neither reviewed nor has knowledge of such content. Publisher: JOURNALIST NEWS