Friday, 10 Jul, 7.32 pm காலைமணி.காம்

வணிகம்
சென்செக்ஸ் 143 புள்ளிகள் சரிவு பங்குச் சந்தை நிலவரம்

மும்பை நிருபர்

இந்த வாரத்தின் ஐந்தாவது வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்தியச் சந்தைகள் சரிவடைந்தன. இதையடுத்து முக்கிய குறியீட்டெண்கள் சரிவுப்பெற்றன.

வெள்ளிக்கிழமை காலையில் சந்தைகள் சரிந்து துவங்கின. அதன் பின்னர் சந்தைகள் தடுமாற்றத்துடன் வர்த்தகமாகி வர்த்தக நேர இறுதியில் புள்ளிகள் சரிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 143.36 புள்ளிகள் அல்லது 0.39 சதவீதம் சரிந்து 36,594.33 புள்ளிகளில் நிறைவடைந்தது. தரக் குறியீட்டுப் பங்குகளில் 30 பங்குகளில் 9 பங்குகள் உயர்வை கண்டன. 21 பங்குகள் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் காலையில் 183 புள்ளிகள் வரை குறைந்து 36,555.13 புள்ளிகளில் துவங்கியது. குறைந்தபட்சமாக 36,401.11 புள்ளிகளுக்கும், அதிகபட்சமாக 36,748.89 புள்ளிகளுக்கும் சென்று வர்த்தக நேர முடிவில் 36,594.33 புள்ளிகளில் நிலைபெற்றது.

சென்செக்ஸ் காலையில் 183 புள்ளிகள் வரை குறைந்து துவங்கியது. பின்னர் 154 புள்ளிகள் வரை குறைந்து வர்த்தக நேர இறுதியில் 39 புள்ளிகள் வரை உயர்ந்து நிலைபெற்றன. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2833 பங்குகளில் 967 பங்குகள் முன்னேற்றம் கண்டன. 1705 பங்குகள் பின்னடைவைச் சந்தித்தன.161 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.

மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ், சன்பார்மா, ஹெச்யுஎல் ஆகியவை அதிகபட்சமாக 2 சதவீதத்திற்கு மேல் ஆதாயம் பெற்றன. அடுத்தப்படியாக பார்திஏர்டெல் 1.03 சதவீதத்திற்கு மேலும் ஆதாயம் பெற்றன. மேலும் டிசிஎஸ், பவர்கிரிட், நெஸ்லே, பஜாஜ் ஆட்டோ, இன்போசிஸ் ஆகிய பங்குகளும் ஆதாயம் பெற்ற பங்குகளின் பட்டியலில் வந்தன.

அதே வேளையில் ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க், டைட்டன் ஆகியவை அதிகபட்சமாக 3 சதவீதத்திற்கு மேல் இழப்பைச் சந்தித்தன. அடுத்தப்படியாக எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், ஓஎன்ஜிசி ஆகியவை 2 சதவீதத்திற்கு மேலும் எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், டெக்எம், கோடக் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், எல்டி, அல்ட்ராசிமெண்ட், எம் அண்ட் எம், எச்சிஎல்டெக் ஆகியவை 1 சதவீதத்திற்கு மேல் இழப்பைச் சந்தித்தன. மேலும் என்டிபிசி, ஏசியன் பெயிண்ட், மாருதி, ஐடிசி, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகளும் இழப்பைப் பெற்ற பங்குகளின் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 45.40 புள்ளிகள் அல்லது 0.42 சதவீதம் குறைந்து 10,768.05 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையின் 50 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் உயர்வை பெற்றன. 37 பங்குகள் சரிவைச் சந்தித்தன. காலையில் நிஃப்டி 49 புள்ளிகள் வரை குறைந்து 10,764.10 புள்ளிகளில் துவங்கியது. குறைந்தபட்சமாக 10,713.00 புள்ளிகளுக்கும் அதிகபட்சமாக 10,819.40 புள்ளிகளுக்கும் சென்று வர்த்தக நேர முடிவில் 10,768.05 புள்ளிகளில் நிலைபெற்றது.

நிஃப்டியைப் பொருத்தவரை ரிலையன்ஸ் அதிகபட்சமாக 3.07 சதவீதத்திற்கு மேல் ஆதாயம் பெற்றன. அடுத்தப்படியாக ஹெச்யுஎல், சன்பார்மா ஆகியவை 2 சதவீதத்திற்கு மேலும் பிரிட்டானியா, பார்திஏர்டெல்
ஆகியவை 1 சதவீதத்திற்கு மேலும் ஆதாயம் பெற்றன. மேலும் டிசிஎஸ், கோல் இந்தியா, பவர்கிரிட், நெஸ்லே, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டி, விப்ரோ ஆகிய பங்குகளும் ஆதாயம் பெற்ற பங்குகளின் பட்டியலில் வந்தன.

அதே வேளையில் ஆக்ஸிஸ் பேங்க் அதிகபட்சமாக 3.16 சதவீதத்திற்கு மேல் இழப்பைச் சந்தித்தன. அடுத்தப்படியாக கெயில், இன்டஸ்இண்ட்பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, இன்ப்ராடெல், டைட்டன், அதாணி போர்ட், ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல் ஆகியவை 2 சதவீதத்திற்கு மேலும் ஓஎன்ஜிசி, டெக்எம், எஸ்பிஐ, ஸ்ரீ சிமெண்ட், டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி பேங்க், வேதாந்தா, யுபிஎல், கோடக் பேங்க், அல்ட்ராசிமெண்ட், எச்சிஎல்டெக், எல்டி, பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி ஆகியவை 1 சதவீதத்திற்கு மேலும் இழப்பைச் சந்தித்தன. மேலும் எம் அண்ட் எம், கிராசிம், ஜீ என்டர்டெய்ன்மெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட், மாருதி, ஐடிசி, ஹீண்டல்கோ, ஐஒசி, ஹீரோமோட்டோ, பிபிசிஎல், இன்போசிஸ், ஈச்சர்மோட்டார், சிப்லா ஆகிய பங்குகளும் இழப்பை பெற்ற பங்குகளின் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமான 1932 பங்குகளில் 617 பங்குகள் லாபம் கண்டன. 1258 பங்குகள் நஷ்டமடைந்தன. 57 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Kaalaimani.com Tamil
Top