Thursday, 09 Jul, 8.02 pm காலைமணி.காம்

வணிகம்
சென்செக்ஸ் 409 புள்ளிகள் உயர்வு பங்குச் சந்தை நிலவரம்

மும்பை நிருபர்

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான வியாழக்கிழமை இந்தியச் சந்தைகள் உயர்வடைந்தன. இதையடுத்து முக்கிய குறியீட்டெண்கள் உயர்வுப்பெற்றன.

வியாழக்கிழமை காலையில் சந்தைகள் உயர்ந்து துவங்கின. அதன் பின்னர் சந்தைகள் தடுமாற்றத்துடன் வர்த்தகமாகி வர்த்தக நேர இறுதியில் புள்ளிகள் உயர்வடைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 408.68 புள்ளிகள் அல்லது 1.12 சதவீதம் உயர்ந்து 36,737.69 புள்ளிகளில் நிறைவடைந்தது. தரக் குறியீட்டுப் பங்குகளில் 30 பங்குகளில் 22 பங்குகள் உயர்வை கண்டன. 8 பங்குகள் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் காலையில் 122 புள்ளிகள் வரை உயர்ந்து 36,450.69 புள்ளிகளில் துவங்கியது. குறைந்தபட்சமாக 36,422.30 புள்ளிகளுக்கும், அதிகபட்சமாக 36,806.30 புள்ளிகளுக்கும் சென்று வர்த்தக நேர முடிவில் 36,737.69 புள்ளிகளில் நிலைபெற்றது.

சென்செக்ஸ் காலையில் 122 புள்ளிகள் வரை உயர்ந்து துவங்கியது. பின்னர் 28 புள்ளிகள் வரை குறைந்து வர்த்தக நேர இறுதியில் 287 புள்ளிகள் வரை உயர்ந்து நிலைபெற்றன. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2851 பங்குகளில் 1406 பங்குகள் முன்னேற்றம் கண்டன. 1286 பங்குகள் பின்னடைவைச் சந்தித்தன.159 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.

மும்பை பங்குச் சந்தையில் பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி ஆகியவை அதிகபட்சமாக 3 சதவீதத்திற்கு மேல் ஆதாயம் பெற்றன. அடுத்தப்படியாக பஜாஜ் ஃபின்சர்வ், எச்சிஎல்டெக், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 2 சதவீதத்திற்கு மேலும் எம் அண்ட் எம், ஏசியன் பெயிண்ட், ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், அல்ட்ரா சிமெண்ட், பார்திஏர்டெல், கோடக் பேங்க், பஜாஜ் ஆட்டோ ஆகியவை 1 சதவீதத்திற்கு மேலும் ஆதாயம் பெற்றன. மேலும் பவர்கிரிட், இன்போசிஸ், இன்டஸ்இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எல்டி, என்டிபிசி ஆகிய பங்குகளும் ஆதாயம் பெற்ற பங்குகளின் பட்டியலில் வந்தன.

அதே வேளையில் ஓஎன்ஜிசி, டெக்எம் ஆகியவை அதிகபட்சமாக 1 சதவீதத்திற்கு மேல் இழப்பைச் சந்தித்தன. அடுத்தப்படியாக மாருதி, டிசிஎஸ், ஹெச்யுஎல், ஐடிசி, சன்பார்மா, நெஸ்லே ஆகிய பங்குகளும் இழப்பைப் பெற்ற பங்குகளின் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 107.70 புள்ளிகள் அல்லது 1.01 சதவீதம் உயர்ந்து 10,813.45 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையின் 50 முதல் தரப் பங்குகளில் 35 பங்குகள் உயர்வை பெற்றன. 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன. காலையில் நிஃப்டி 50 புள்ளிகள் வரை உயர்ந்து 10,755.55 புள்ளிகளில் துவங்கியது. குறைந்தபட்சமாக 10,733.00 புள்ளிகளுக்கும் அதிகபட்சமாக 10,836.85 புள்ளிகளுக்கும் சென்று வர்த்தக நேர முடிவில் 10,813.45 புள்ளிகளில் நிலைபெற்றது.

நிஃப்டியைப் பொருத்தவரை ஹீண்டல்கோ அதிகபட்சமாக 6.58 சதவீதத்திற்கு மேல் ஆதாயம் பெற்றன. அடுத்தப்படியாக எச்டிஎஃப்சி, எஸ்பிஐ ஆகியவை 4 சதவீதத்திற்கு மேலும் பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல் ஆகியவை 3 சதவீதத்திற்கு மேலும் கெயில், பஜாஜ் ஃபின்சர்வ், எச்சிஎல்டெக், ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம் ஆகியவை 2 சதவீதத்திற்கு மேலும் வேதாந்தா, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட், கிராசிம், ஸ்ரீ சிமெண்ட், ரிலையன்ஸ், பார்திஏர்டெல், அல்ட்ராசிமெண்ட், எச்டிஎஃப்சி பேங்க், ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல், கோடக் பேங்க், அதாணி போர்ட்ஸ், பவர்கிரிட், பஜாஜ் ஆட்டோ ஆகியவை 1 சதவீதத்திற்கு மேலும் ஆதாயம் பெற்றன. மேலும் இன்போசிஸ், இன்டஸ்இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், சிப்லா, ஈச்சர்மோட்டார், எல்டி, என்டிபிசி, டாக்டர் ரெட்டி, டைட்டன், சன்பார்மா, யுபிஎல் ஆகிய பங்குகளும் ஆதாயம் பெற்ற பங்குகளின் பட்டியலில் வந்தன.

அதே வேளையில் இன்ப்ராடெல், கோல் இந்தியா, டெக்எம் ஆகியவை அதிகபட்சமாக 1 சதவீதத்திற்கு மேல் இழப்பைச் சந்தித்தன. அடுத்தப்படியாக ஓஎன்ஜிசி, ஹீரோமோட்டோ, விப்ரோ, மாருதி, டிசிஎஸ், ஹெச்யுஎல், பிரிட்டானியா, ஐஒசி, நெஸ்லே, ஐடிசி, பிபிசிஎல், ஜீ என்டர்டெய்ண்மெண்ட் ஆகிய பங்குகளும் இழப்பை பெற்ற பங்குகளின் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமான 1937 பங்குகளில் 1014 பங்குகள் லாபம் கண்டன. 845 பங்குகள் நஷ்டமடைந்தன. 78 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Kaalaimani.com Tamil
Top