Dailyhunt
"அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிய எனக்கு அங்கீகாரம் இல்லை": முன்னாள் சபாநாயகர் தனபால் குமுறல்!

"அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிய எனக்கு அங்கீகாரம் இல்லை": முன்னாள் சபாநாயகர் தனபால் குமுறல்!

.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தை பாஜகவிடம் அடகு வைத்தார்கள். தற்போது இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சியையே எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-விடம் ஒப்படைத்துவிட்டார்.

பெயர் அளவிற்கு மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கட்சித் தலைவர்களாக உள்ளனர். ஆனால், அ.தி.மு.க-வில் முடிவுகள் எடுப்பது அனைத்தும் பாஜகதான். சுயமரியாதை உள்ளவர்கள் அ.தி.மு.க-விலிருந்து வெளியேறி, தங்களுக்கு எங்கு மரியாதை இருக்கிறதோ அந்தப் புதிய கட்சிகளில் இணைந்துவிட்டனர்.

ஆனால், பலர் வேறு வழியின்றி அதிமுகவில் சகித்துக்கொண்டு இருக்கிறார்கள். தொண்டர்களோ கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவை மறந்து வருகிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, டெல்லியிலிருந்து தலைவர்கள் தமிழகத்திற்கு வந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, டெல்லிக்கு ஓடி ஓடிச் சென்று கூட்டணித் தொகுதிகளைப் பேசி முடித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்படும் பல தொகுதிகள் பா.ஜ.க-விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாகக் கூட்டணிக் கட்சிகள் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடவே விரும்புவார்கள். ஆனால் தற்போது கூட்டணிக் கட்சிகள் 'தாமரை' சின்னத்தில் நிற்கிறார்கள். அந்த அளவிற்கு அதிமுகவில் பாஜகவின் ஆதிக்கம் உள்ளது"

இந்நிலையில், அ.தி.மு. க ஆட்சியை காப்பாற்றிய எனக்கு அந்த கட்சியில் மரியாதை இல்லை என முன்னாள் சபாநாயகர் தனால் குமுறியுள்ளார்.

இது குறித்து மனம் நொந்து பேட்டி கொடுத்துள்ள தனபால், "அவிநாசி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த என்னிடம், 'போட்டியிட விருப்பமா, இல்லையா?' என்று கூடக் கேட்கவில்லை. 18 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியபோது, சபாநாயகர் பொறுப்பில் இருந்த நான்தான் அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்தேன். ஆனால், தற்போது அ.தி.மு.க-வில் எனக்கு மரியாதை இல்லை." என கூறியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalaignar Seithigal