Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்" : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!

"குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்" : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!

குதிரைபேர குற்ற செயலில் ஈடுபட்டு வருகிற விஜய் அரசு. ஆட்சி பொறுப்பு ஏற்று இந்த 50 நாட்களாக ஒரு அவல ஆட்சியை நடத்திக்கொண்டு வருகிறது.

அப்படி பட்ட சூழலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது குற்றம சுமத்துவதற்கும் பழி போடுவதற்காக, குதிரைபேர அரசியலை திமுகமுன்னெடுத்திருக்கிறது என்கின்ற ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யை நேற்றைக்கு அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் தனது பேட்டியின் வாயிலாக தெரிவித்திருக்கிறார்.

திமுக மீது அவதூறு பரப்பிவரும் தவெக அரசுக்கு எதிராக சட்டத்துறை இணைச்செயலாளரும் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் இ.பரந்தாமன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

விஜய் அவர்களுடைய அரசு என்பது 150, 160 தொகுதிகளில் இமாலய வெற்றி பெற்று அமைந்த ஆட்சி அல்ல இது ஒரு மைனாரிட்டி ஆட்சி. 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜய் அரசு தனது ஒரு தொகுதியை ராஜினாமா செய்த பிறகு 107ஆக குறைந்து, பிறகு நீதிமன்றத்தினுடைய தடை உத்தரவால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் வாக்களிப்பதற்கு தடை விதித்த பின் 106 ஆக குறைந்தது. சபாநாயகருடைய ஒரு வாக்கை கழித்தால் 105 தான். வெறும் 105 இடங்களை வைத்துக்கொண்ட விஜய் அரசு மிக பலமான ஒரு அரசு போன்றும் இந்த அரசை சீர்குலைப்பதற்கு, இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் சதி செய்வதாக ஒரு நகைச்சுவையை அரங்கேற்றி வருகிறார்கள். விஜய் அரசாங்கம் என்றைக்கும் கவிழக்கூடிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறது என்று ஒரு சாதாரண பாமர மக்களுக்கு கூட தமிழ்நாட்டில் இன்றைக்கு தெரியும். அரசியல் புரிதல் உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரியும். அது ஒன்னும் ஒரு பெரிய எக்கு கோட்டையில் இருக்கக்கூடிய ஒரு கோபுரம் அல்ல. ஒரு சீட்டு கட்டு போலதான் விஜய் அரசு இன்றைக்கு இருக்கிறது. ஒரு காத்து அடித்தால் கூட சரிகின்ற நிலையில் தான் இருக்குதே தவிர வலுவான ஆட்சியோ அதிகாரமோ அவர்களுக்கு இல்லை. எனவே அதை மறந்து தினம் தினம் இவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

குதிரை பேரத்தை செய்கிறது யார்? இன்றைக்கு விஜய் சர்க்கார் குதிரை பேர சர்க்கார் என்று நாங்கள் குற்றம்சாட்டுகிறோம். ஆட்சி பொறுப்பு ஏற்பதற்கு முன்பு மே 4 ஆம் தேதி ரிசல்ட் வந்ததில் இருந்து, 10ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்கின்ற வரை இதற்கிடையில் தங்களுக்கான பலத்தை பெருக்குவதற்காக எத்தனையோ பேரங்களை நடத்தினார்கள். அதில் ஒன்றுதான் மே 7 ஆம் தேதி அமமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை முகத்தை மூடிக்கொண்டு இனோவா காரில் வரவைத்து சந்தித்தது. அது உண்மையா இல்லையா என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அதை பற்றி இன்றுவரை வாய் திறந்து பேசாமல் இருப்பது விஜய் அரசாங்கம். எனது கட்சி சட்டமன்ற உறுப்பினரை கடத்தி சென்றிருக்கிறார்கள். எங்களுடைய கையெழுத்தை போலியாக பயன்படுத்தி கடிதம் கொடுத்திருக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாரே அந்த புகாரை இன்றுவரை பதிவு செய்யவில்லை காவல்துறை. ஆனால் நேற்றைக்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றி திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த முன்னாள் அமைச்சர் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்பது போலவும் மூன்று பேரை கைது செய்து இதோ பார் திமுகா குதிரை பேரம் செய்வதற்காக முயற்சி செய்தார்கள் என்று ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக எங்களுடைய அமைப்பு செயலாளர் மேதகு ஆளுனரிடத்திலே கடிதம் கொடுத்திருக்கிறார். லஞ்ச ஒழிப்பு துறையிடத்திலே கடிதம் கொடுத்திருக்கிறார். என்ன காரணம்? 7 ஆம் தேதி அமமுக கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினரை நீங்கள் வழுக்கட்டாயமாக கடத்தி சென்றிருக்கிறீர்கள் அது ஒரு குற்றச்சாட்டு. அதன் பிறகு சட்டமன்றத்தில் 144 வாக்குகளை எப்படி பெற முடிந்தது எல்லா கட்சியினுடைய தலைவர்களையும் போய் விஜய் சந்தித்த விஜய் அதிமுக வில் மட்டும் அதன் தலைமையுடன் முரண்பட்ட எம். எல். ஏ களை சந்தித்தார். கட்சி தலைமையுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கக்கூடிய ஒரு குழுவை சென்று சந்தித்தது குதிரை பேரமா இல்லையா? அதிமுக கட்சி தலைவர் கொடுத்த அந்த கொறடா உத்தரவை மீறி 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்களே அதன் பின்னால் நடந்த பேரம் என்ன.? தலைமையை மீறி அந்த 25 பேர் வாக்களித்ததற்கு கைமாறியது என்ன என்பதை விஜய் விளக்க வேண்டும். யார் குதிரை பேர அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 10 பேருக்கு அமைச்சர் பதவி. 20 பேருக்கு வாரிய தலைவர் பதவி என பொய் வாக்குறுதியை கொடுத்து திரு விஜய் அவர்கள் அதிமுகவின் ஒரு குழுவிடம் பேரம் பேசி சட்ட சிக்கல் ஏற்பட்டுவிடும் என்ற ஒரே காரணத்திற்காக பின்னங்கால் பிடரியில் அடிக்க அவர்கள் தங்களுடைய அரசியல் நகர்வுகளை பின்னோக்கி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அதனுடைய விலைதான் இன்றைக்கு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினராக ராஜினாமா செய்து கொண்டு வருகிறார்கள்.

இதன் எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக அகில இந்திய அரசியல் உலகில் மிக நம்பிக்கைக்கு பாத்திரமான மதிமுக தலைவர் அண்ணன் வைகோ அவர்கள் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். நான் முதல்வரை 27 ஜூன் அன்று சந்தித்தேன். நாங்கள் இருவரும் தனியாக ஒரு மணி நேரம் பேசினோம். திராவிட முன்னேற்ற கழகத்தின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற அந்த இரண்டு பேரை ராஜனாமா செய்ய சொல்லுங்கள். இடைத்தேர்தல் வரும். நான் வந்து பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்கிறேன் என்று முதல்வர் திரு விஜய் சொன்னதாக வைகோ அவர்கள் பகிரங்கமாக சொல்லி இருக்கிறார். இது குதிரை பேரம் இல்லையா.? இதற்கு விலை போனது என்ன.? எவ்வளவு பணம் கைமாறியது.? இதையெல்லாம் தவெக கட்சியில் இருக்கிறவர்கள் மறந்துவிட்டு இன்று திமுக வை பார்த்து குற்றம் கூறுகிறார்கள்.

29ஆம் தேதி தவெகவினுடைய ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்ததாக சொல்லுகிறார்கள். காவல் துறையினுடைய செய்தி குறிப்பில் இந்த தொலைபேசி தொடர்புகள் எந்த தேதியில் ஏற்பட்டது என்பதை இதுநாள் வரை சொல்லவில்லை. ஆனால் 29ஆம் தேதி புகார் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த புகார் பெறுவதற்கு முன்பே திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த என்று சொல்லப்படுகிற நபர்களுடைய வீட்டுகளுக்கு சென்று ரைடு செய்ததாக சொல்லுகிறார்கள். புகார் வாங்குவதற்கு முன்பே எப்படி இவங்க ரைடு போறாங்க.? 29ஆம் தேதி புகார் பெற்ற உடனே திருவல்லிக்கேணி காவல் துறையினர் வந்து கைது செய்கிறார்கள் என்று சொன்னால் திரு.வைகோ அவர்கள் சொன்ன வாக்குமூல அடிப்படையில் நாங்கள் கொடுத்திருக்கின்ற அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுத்து லஞ்ச ஒழிப்பு துறை ஏன் இதுரவரை வைகோவை விசாரிக்கவில்லை. இப்போ திமுகவின் இந்த புகாரின் அடிப்படையில் வைகோ அவருடைய பேச்சின் அடிப்படையில் No.1 குற்றவாளி தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள். இதையெல்லாம் மூடி மறைப்பதற்காக திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது சேற்றைவாரி வீசுவதற்காக இது போன்ற பொய் நரேட்டிவ் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்து 54 நாட்களில் என்ன நிர்வாகத்தை இவர்கள் கொடுத்திருக்கிறார்கள். இவர்களுடைய அமைச்சர் மேல் போதை பவுடரை பயன்படுத்திய குற்றச்சாட்டு உள்ளது. இதுநாள் வரை விஜய் வாய் திறக்கவில்லை. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது நேரடியாக விஜயினுடைய ரசிகையாக இருக்கக்கூடிய அந்த அம்மையார் குற்றம் சுமத்தி இருக்கிறார். அது குறித்து இதுவரை விஜய் வாய் திறக்கவில்லை. ஏன் இன்றைக்கு போதை ஊசிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு இளம் பெண்களும் இளைஞர்களும் மரணமடைந்து வருகிறார்கள். அதை பற்றி இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதை பற்றி இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. அரிசியினுடைய விலை இன்றைக்கு ஏறி இருக்கிறது. அதை பற்றி இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. கஞ்சாக்களை வண்டி வண்டியாக கடத்துகிறார்கள். தவெக நிர்வாகிகளே இந்த குற்ற செயல் ஈடுபட்டதாக ஆதாரப்பூர்வமாக ஊடங்களில் வந்திருக்கிறது. இது குறித்து தவெக தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. இப்படி இவர்கள் நிர்வாக திறனற்ற ஆட்சியால் ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த அவலங்களை எல்லாம் மூடி மறைப்பதற்காக திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது இத்தகைய பழிகளை குற்றங்களை சுமத்துகிறார்கள். ஆட்சி திறனற்ற பதவி போதையில் இருக்கும் ஒரு முதலமைச்சரின் இயலாமையை மூடி மறைக்க இந்த நாடக்கங்களை நடத்துகிறார்கள். கண்டென்டக்காகவும் , ரீல்ஸ்காகவும் சோசியல் மீடியாவில தினமும் இவர்கள் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் வாய்க்கு வந்தததை எல்லாம் மாண்புமிகு அமைச்சர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு நாள் இவர்கள் சினிமா தியேட்டரில் பிளாக் டிக்கெட் வித்திருக்கலாம். ஆனால் இன்று இவர்கள் மாண்புமிகு அமைச்சர்கள் அதன் மாண்பறிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு அமைச்சர் பொறுப்பு என்பது ஆதாரத்தோடு பேச வேண்டும். நேற்று நிர்மல் குமார் அவர்கள் வாய்கிழிய பேசுகிறாரே எங்களுடைய தலைவர் அரசியலிலிருந்து ஒதுக வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியாக ஒதுங்கி வந்தவர்தான் தான் நிர்மல் குமார். பாஜாக, அதிமுக, அமமுக என கடைசியாக இன்றைக்கு தஞ்சம் புகுந்து தவெக வில் இருக்கிற திரு. நிர்மல் குமார் அவர்கள் எல்லாம் எங்களுடைய தலைவரை பற்றி பேச துளியும் அருகதை இல்லை தகுதியும் இல்லை. ஆட்சி உங்களுக்கு

கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி நிர்வாகத்தை செய்து மக்களிடத்திலே திட்டங்களை கொடுத்து உங்களுடைய பேரை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது நீங்கள் குற்றம் சுமத்துவீர்களேயானால் இது போன்ற தவறான செய்திகளை பரப்புவீர்களேயானால் உங்களுக்கு எங்களுடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவருடைய திரைக்கதை வசனம் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது அரண்மனை நாயே அடக்குடா உன் வாயை என்கின்ற வசனத்தை நான் நிர்மல்குமார் அவர்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.

விஜய் அவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினராக ராஜினாமா செய்வதற்கான காரணத்தை விளக்க வேண்டும். மேதகு ஆளுனர் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு சபாநாயகரை அழைத்து பேசி இருக்கிறார். அப்போது திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து புகார் வருகிறது. எதிர்கட்சிகளிலிடமிருந்து புகார் வருகிறது. மக்களிடத்திலிருந்து புகார் வருகிறது. தினந்தோறும் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜிராமா செய்வதனுடைய நோக்கம் என்ன.? என விளக்கம் கேட்டதாக தகவல்கள் வருகின்றன.

சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதை நார்மலைஸ் செய்கிறார்கள், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களாக ராஜினாமா செய்கிறார் என்று சொன்னால் இது சாதாரணமான நிகழ்வாக கடந்து போக முடியாது. இது தமிழ்நாட்டினுடைய ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய ஒரு தாக்குதல். விஜய் அரசாங்கத்திற்கு என்ன ஒரு டவுட் என்றால் இன்று ஆதரவு கொடுத்துள்ள கட்சிகளின் ஆதரவெல்லாம் எத்தனை நாளைக்கு இருக்கும் என்ற சந்தேகம் விஜய்க்கு இருக்கிறது. எனவே தனக்கு தேவையான பலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறார். இன்னும் சொல்லப்போனால் பாஜக வடிவமைத்து கொடுத்த ஸ்கிரீன் பிளேயை தான் இன்றைக்கு விஜய் செய்து கொண்டிருக்கிறார். பிஜேபினுடைய ஒரு ட்ராப் இது.

இவர்கள் ஒருவேளை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பலம் படைத்துவிட்டால் இவங்களை எல்லாம் கழட்டி விட்டுட்டு விஜய் பிஜேபி பக்கம் நிற்பதற்காகத்தான் இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தமிழ்நாடு அரசாங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி எதிர்த்தோம். பிஜேபி ஆளுகிற மாநிலங்கள் மூன்று மாநிலங்கள் எதிர்த்து கடிதம் எழுதி இருக்கின்றன. ஆனால் சத்தமில்லாமல் விஜய் அவர்கள் 25 ஜூன் அன்று ஒரு அரசாணை போட்டு அதை நடைமுறைப்படுத்தி உள்ளார். ஒருபக்கம் பாஜக சொல்லுகிற கட்டளைக்கு அடிபணிவது இன்னொருபக்கம் தமிழ்நாட்டில் ஒரு செக்குலர் முகத்தை முன்நிறுத்துவது. இதுபோன்ற அரசியல் நாடகத்தை நடத்தி வருகிற விஜய் அரசாங்கம் மக்கள் மத்தியில் எக்ஸ்போஸ் ஆகி வருகிறது. இன்றைக்கு இளம் தலைமுறைகள் எல்லாம் ஏன் இந்த அரசாங்கத்துக்கு ஓட்டு போட்டோம் என நொந்து போய் வீடியோ போட ஆரம்பிச்சிட்டாங்க. இதெல்லாம் ஒரு மிகப்பெரிய ஒரு அலையாக உருவாகி இடைத்தேர்தலில் இவங்க மண்ணை கவ்வக்கூடிய ஒரு சூழல் ஏற்படுமோ என்கின்ற அச்சத்தின் காரணமாகத்தான், இது போன்ற அரசியல் சித்து விளையாட்டிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

காவல்துறையை வைத்துக்கொண்டு பொலிட்டிக்கல் ஸ்டேட்மெண்ட் கொடுக்குது இந்த கவர்மெண்ட். எந்த கவர்மெண்டும் செய்யாத ஒன்று, எந்த கவர்மெண்டும் மீறாத ஒரு மரபு, எந்த கவர்மெண்டும் மீறாத ஒருவரைமுறையை இந்த அரசாங்கம் மீறி உள்ளது. நாங்கள் இதன் மூலமாக நாங்கள் காவல்துறை தலைவருக்கு சொல்லிக் கொள்வது. ஆதராப்பூர்வமாக நடந்த வற்றை மட்டும் தான் காவல்துறை வெளியிட வேண்டுமே தவிர பொத்தாம் பொதுவாக அரசியல் ஸ்டேட்மெண்ட் விடுவது சட்டப்படி தவறு. நேற்று காவல்துறை கைது பண்ணீய மூன்று பேர் தொடர்பாக வெளியிட்ட பிரஸ் ஸ்டேட்மெண்ட்ல திருநாவுக்கரசும் அந்த மற்றொருவரும் செந்தில் பாலாஜியினுடைய தம்பியை சந்தித்து பேசியதாக நீங்கள் சொல்றீங்க. எந்த வித ஆதாரமும் இல்லாமல் அதற்கான முகாந்திரமும் இல்லாமல் வெறும் அரசியல் நோக்கோடு அந்த ஸ்டேட் மண்ட் வெளியிடப்பட்டிருக்கு. இது போன்ற ஒரு தவறான ஸ்டேட்மெண்ட் போலீஸ் தரப்பிலிருந்து இனி வரும் என்றால் திராவிட முன்னேற்ற கழகம் காவல்துறை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு தயாராக இருப்போம் என்பதை இதன் மூலமாக எச்சரித்துக் கொள்கிறோம்.

அதோடு, விஜயின் பொலிட்டிகல் அட்வைசர்ஸ் கேபினெட் மீட்டிங்ல உட்கார வேண்டிய அவசியம் என்ன கேபினெட் மீட்டிங்ல உட்காருவதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொண்ட முதலமைச்சர் அவர்கள் துறைக்கு அரசுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எப்படி தன் பக்கத்தில அனுமதிக்கலாம். இதையெல்லாம் திராவிட முன்னேற்ற கழகம் கேட்டிருக்கிறது. இந்த கேள்விகளுக்கெல்லாம் தவெக அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அந்த பதில் சொல்லக்கூடிய தைரியமோ அதற்கான சரியான ஆதாரமோ அவர்களிடம் இல்லை. எனவேதான் ஒவ்வொரு நாளும் ஒரு நரேட்டிவை செட் பண்ணி இதை திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது மடை மாற்றுகிற அரசியல் செய்கிறார்கள். இவர்கள் டைவர்ஸிவ் பாலிடிக்ஸ் தான் செய்கிறார்களாவே தவிர நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல அரசியலையும் இவர்கள் முன்னெடுத்தவில்லை எனவே தான் இது விஜய் சர்க்கார் அல்ல இது குதிரைபேர சர்க்கார் என கூறுகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalaignar Seithigal