Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..' - வானிலை மையம் எச்சரிக்கை!

'மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..' - வானிலை மையம் எச்சரிக்கை!

பிரதமர் அலுவலக மேற்பார்வையில் நடந்த நீட் மறுதேர்விலும் மோசடி : 30 பேர் கைது!கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மெப்பாடி அருகில் உள்ள கல்லாடியில் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் அனஹம்பொயில் - மெப்பாடி சுரங்கப்பாதை சாலைத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இதில் இன்று (ஜூலை 07) மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை மையம் கூறியுள்ளது.

சுரங்கப்பாதை பணிக்காக அகற்றப்பட்ட மண், கட்டுமானப் பகுதிக்கு அருகிலேயே குவித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இதனால் மண் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்த நிலையில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

"முதற்கட்ட தகவலின்படி ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஏழு பேரைக் காணவில்லை. காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்" எனக் கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சில பகுதிகளுக்ககு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக நேற்று (ஜூலை 06) முதலே சுரங்கப்பாதை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக, கேரள மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 265 மி.மீ வரை அந்தப்பகுதியில் மழை பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வயநாடு மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் வானிலை ஆய்வாளர் நீதா கே.கோபால், "கடந்த சில நாட்களாக வயநாட்டில் அதிக மழைப் பொழிவு இல்லை" எனக் கூறியுள்ளார்.

நேற்று (ஜூலை 06) முதல் மேற்கத்திய காற்று வலுவடைந்துள்ளதால் கேரளாவில் மலைப்பாங்கான பகுதிகள் அனைத்திலும் குறிப்பாக வயநாடு, மலப்புரம், இடுக்கி மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கி விட்டதால் மீண்டும் ஒரு கோரம் கேரளம் மாநிலத்தில் நிகழாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள அரசு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் அலுவலக மேற்பார்வையில் நடந்த நீட் மறுதேர்விலும் மோசடி : 30 பேர் கைது!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalaignar Seithigal