Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!

நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!

முரசொலி தலையங்கம் (10-09-2026)

நடிக்காதே நயவஞ்சகா...!

விஜய்யின் அசிங்கமான, கீழ்த்தரமான, நாற்றமடிக்கும் அரசியல் தமிழ்நாட்டையே மிகமிக மோசமான நிலைமைக்குக் கள்ளி வருகிறது.

முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு நாட்டு மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யத் துப்பு இல்லாத விஜய், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் - திராவிட நாயகன் - தியாகத்தின் அடையாளமான மு.க.ஸ்டாலினை அசிங்கப்படுத்துவதுதான் தனது ஒரே வேலை எனச் செய்து வருகிறார்.

மிசாவில் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்ததை கொச்சைப்படுத்தி விஜய் காட்டிய சைகையும், அது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமாரின் பொய் மூட்டைகளும் சட்டமன்றத்தில் அரங்கேறி சட்டமன்றத்தையே அசிங்கம் ஆக்கிவிட்டது.

ஓராண்டு காலம் அல்ல, ஒரு நாள் கூட ஜெயிலுக்குள் தாங்க மாட்டார் விஜய். சினிமாவில் சிறையில் இருக்கலாம். அடிவாங்குவதைப் போல நடிக்கலாம் ஆனால் உண்மையான சிறை, அதுவம் மிசா சிறை என்பது அனுபவித்துப் பார்க்- தவர்களுக்குத் தான் அந்த வேதனை தெரியம். அதைக் கொச்சைப்படுத்தும் போது நாம் அடையும் வேதனை அளவுக்கு அதிகமானது.

"முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகனாகிய மு.க.ஸ்டாலின் (வயது 23) சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு மாநிலத்தில் சட்டவிரோதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் கட்சியால் நடத்தப்படும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, பிரிவினைவாத மற்றும் அவசரநிலைக்கு எதிரான கட்சியின் கொள்கைகளைப் பரப்பி வருகிறார். மாநில அரசின் சொந்தத் தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் மத்திய அரசே காரணம் என்று கூறி, மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு வருகிறார். மாநிலச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாவிட்டால் தமிழ்நாட்டில் பரட்சி வெடிக்கும் என்று மிரட்டும் அளவிற்கு இவர் சென்றுள்ளார். இவர் தேச விரோத, அவசரநிலை எதிர்ப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான வலுவான கருத்துக்களைக் கொண்டவர். இவர் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடுவது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பொது அமைதியைப் பராமரிப்பதற்கும் கேடு விளைவிப்பதாக அமையும். எனவே, 'உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1971'-இன் பிரிவு 3(1) (a) (ii) மற்றும் பிரிவு 3(1) (e) ஆகியவற்றின் கீழ் இவரைக் காவலில் வைப்பது அவசியமாகும்" என்று 1-3-1976 அன்று கூடுதல் காவல் துறைத் தலைவர் மற்றும் காவல் ஆணையர் உத்தரவிட்டு கைது செய்யப்பட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின். நிர்மல்குமாருக்கு தமிழ் வாசிக்கத் தெரியமானால் இதைப் படிக்க வேண்டும்.

மிசாவில் கைதான போது -அன்றைய இரவு எப்படி இருந்தது என்பதை சிட்டிபாபு தனது சிறை டைரியில் எழுதி இருப்பார்...

"அன்றிரவு ஒரு மணி இருக்கும். என் தம்பி ஸ்டாலின் சிறைக்கு அழைத்து வரப்பட்டான். பாவம் பூது திருமணப் பிள்ளை. முழு வாழ்வை அவன் பெறுவதற்கு முன்னால் அவனுக்கு முள்வேலி. சிறை உணவை தம்பி (ஸ்டாலின்) சுவைத்தான். பசியோ என்றுகூட எண்ணினேன். இல்லை பழக்கப்படுத்திக் கொள்ளவே என்றான். இதுதானே இனிமேல் உணவு நமக்கு என்று என்னைக் கேட்டான்.

முதலில் நான் தாக்கப்பட்டேன். பின்னர் தம்பி தாக்கப்பட்டான். தமிழகத்தின் முதல் அமைச்சரின் மகன் என்று நேற்றுவரை அறிந்த அந்த ஆசிரியன் (சுருளிராஜன்) தன் கால் பூட்ஸால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள்பட்டையில்! காக்கி உடை அணிந்த வார்டர் ஒருவன் ஸ்டாலின் கன்னத்தில் அறைந்தான். கொலை வெறியர்கள் தடிகளால் தாக்கினார்கள். கண்டேன் காட்சியை ! இவர்கள் இவனை அடித்தே கொன்று விடுவார்கள் என்ற உணர்வு ஏற்பட்டது! மற்றவர்கள்தான் மண்ணுடன் சாய்ந்து கிடப்பவர்களாக இருக்கின்றனர்! உதவிக்கு எழ அவர்கள் முடியாதபடி அருகில் எமதூதர்கள்! என்ன செய்வது;

எனக்கென்று ஓர் துணிவு! திடீரென்று குறுக்கே பாய்ந்தேன்! தம்பியை தள்ளிக் கொண்டே தடிகள் கழுத்தில்! அவைகள் அடிகள் அல்ல! உலைக்களத்தில் பழுத்துக் காய்ச்சிய இரும்பை தட்டிப் பதப்படுத்தும் உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தது! கழுத்தில் அத்தனையும் தாங்கிக் கொண்டேன். அன்பத்தம்பி ஸ்டாலின் அறைக்குள்ளே ஓடிவிட வழி கிடைத்தது. வீராசாமியை தூக்கி நிறுத்தி ஒரு குத்துவிட்டு உள்ளே தள்ளினர். நீலம் மூச்சுத் திணற வி.எஸ்.ஜி..யை தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றார்! தம்பி ஸ்டாலினோ தான் பட்ட அடிமறந்து, தன் உடன்பிறப்புகளை உள்ளே அழைத்துச் செல்லும் காட்சி கண்டேன். அவர்களைப் படுக்க வைக்க தன் கோள் துண்டை தரையில் போட்டு, தாக்கப்பட்டவர்களைத் தாங்கி படுக்க வைத்த காட்சி கண்டேன். என்னை ஒருவன் வாடா தம்பி, வா என்று வாயில் ஓர் குத்துவிட்டு உள்ளே தள்ளினான். சர்வாதிகாரத்தின் நச்சு நாக்கு கொடிய காற்றில் நெடிய மரம் சாய்ந்து விழுவது போல் அறையில் நான் வீழ்ந்தேன்! இல்லை கள்ளப்பட்டேன். அறை முழுவதும் இருள் அல்லவா? நினைவு வேறு எனக்குப் பாதியாகத்தான் இருக்கிறது! பூட்டு பூட்டப்பட்டது! ..." இதுதான் சிட்டிபாபவின் சிறை டைரி ஆகும்.

சிறைச்சாலை சித்திரவதைகள் தொடர்பாக நீதியரசர் எம்.எம். இஸ்மாயில் தலைமையில் ஆணையம் அமைத்தார் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அந்த ஆணையத்தில் வைக்கப்பட்ட மிக முக்கியமான ஆவணம் இந்த டைரி தான். தியாக மறவன் சிட்டிபாபு 5.1.1977 அன்று உயிர் நீத்தார் என்பதும் தியாக வரலாற்றின் கண்ணீர் பக்கம் ஆகும்.

வருமான வரி ரெய்டில் சிக்கியபோது முகத்தை மூடிக்கொண்டு ஓடிப்போன விஜய்-தனது படம் ரிலீஸுக்கு பிரச்சினை என்றதும் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பார்க்க கொடநாடு பங்களாவில் காவலாளிக்குப் பக்கத்தில் காத்திருந்த விஜய் - கையைக் கட்டி வீடியோ போட்டு கதறிய விஜய்- கரூரில் 41 பேரை பலியம் பழியம் வாங்கிவிட்டு ஓடிப்போன விஜய் - சினிமாவில் கூட இப்படி ஒரு காட்சி வைத்தால் நடிக்கக் கூட முடியாது.

ஆனால் ஓராண்டு காலம் சிறைச்சாலை சித்திரவகையை அனுபவித்து வாழ்ந்தவர் தியாகத்தின் திருவருவம் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவரிடம் விஜய், பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இதுதொடர்பாக சட்டசபையில் தான் பேசியது அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும். இவை அனைத்தும் சட்டசபைக் குறிப்புகளில் இருந்து நீக்கப்பட வேண்டும். இது எதையம் செய்யாமல், 'எனது உடல்மொழி தவறாக இருந்தால் புண்பட்டு இருந்தால்' என்றெல்லாம் நடிக்கக் கூடாது. நடிக்காதே நயவஞ்சகா!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalaignar Seithigal