Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக... பிறந்தது நீதிக்கட்சி! : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக... பிறந்தது நீதிக்கட்சி! : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

இந்திய விடுதலைக்கு முன்பு, 1920-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் முதன்முதலாக போட்டியிட்டு ஆட்சியமைத்த முக்கிய அரசியல் கட்சி என்ற பெருமை நீதிக்கட்சிக்கு உண்டு.

அத்தகு பெருமையுடன் தமிழ்நாட்டில் சமூக நீதியை விதைத்த நீதிக்கட்சி இன்றுடன் (நவ.20) 110 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதனையொட்டி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு,

"நீதிக்கட்சி பிறந்தது தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக!

தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, பேரறிஞர் அண்ணா முழங்கிய மாநில உரிமை, முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி எனப் பரிணமித்த திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியெழுதியது!

இன்று 'மாற்றம்' என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயலும் சூழலில், திராவிட இயக்கத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. நூற்றாண்டுப் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளை, ஓர் ஆட்சியின் தவறுகளுக்குப் பலிகொடுத்துவிடக் கூடாது!

பெற்ற உரிமைகளைக் காப்போம்!

மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம்!

திராவிடச் சிந்தனையைத் தலைமுறைகள் கடந்து வலுப்படுத்துவோம்!"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalaignar Seithigal