Dailyhunt
"வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" : சீர்காழியில் உற்சாக வரவேற்பு!

"வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" : சீர்காழியில் உற்சாக வரவேற்பு!

மிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த தேர்தலில் தி.மு.க தலைமையிலான மச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. இதை உறுதி செய்யும் வகையிலேயே பரப்புரையில் மக்களின் வரவேற்பும் உறுதி செய்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 31 ஆம் தேதி கலைஞரின் பிறந்த மன்னான திருவாரூரில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இதையடுத்து திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, திருநெல்வேலி, நகார்கோவில், சங்கரன்கோயில், விருதுநகர், திருமங்கலம் ஆகிய மாவட்டங்களில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

முதல் இரண்டு கட்ட பரப்புரைகளை முடித்து விட்டு நேற்று புதுச்சேரியில் தனது மூன்றாம் கட்டட பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். இதையடுத்து இன்று சீர்காழி மற்றும் கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் சீரகாழியில் சீர்காழி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு, 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடையே வாக்கு சேகரித்தார்.

நடைபயிற்சியாக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களிடம் திராவிட மாடல் அரசின் திட்டங்களின் வெற்றிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் மக்களிடம் விளக்கினார். தேநீர் கடையில் மக்களோடு மக்களாக அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalaignar Seithigal