Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அடையார் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.‌.. தமிழக அரசு வெளியிட்ட தகவல்.!!

அடையார் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.‌.. தமிழக அரசு வெளியிட்ட தகவல்.!!

Kalakkal Cinema 5 years ago

அடையார் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Sembarambakkam Lake Update : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட இருப்பதால் அடையாறு தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நிவர் புயல் இன்று மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்க உள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பாதுகாப்பு முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அடையாரில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செம்பரம்பாக்கம் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalakkal Cinema