Saturday, 23 Jan, 3.21 pm Kalakkal Cinema

சினிமா செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாலாஜி முருகதாஸ் வெளியிட்ட முதல் வீடியோ - என்ன பேசி இருக்கார் தெரியுமா??

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல்முறையாக பாலாஜி முருகதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Balaji Murugadoss 1st Video After BB : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யுடன் முடிவுக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் பாலாஜி முருகதாஸ். சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்த இவர் ரன்னராக இடம் பிடித்தார்‌.

என்னதான் முரட்டுத்தனமான மனிதனாக பிக்பாஸ் வீட்டிறகுள் நடந்து கொண்டாலும் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பாலாஜியிடம் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் லைவ் சாட் செய்யுமாறு கேட்டு வந்தனர்.

இப்படியான நிலையில் பாலாஜி முருகதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது லைவ் சாட் வருமாறு கேட்டிருந்தீர்கள் இப்போதைக்கு லைவ் வர முடியவில்லை. அதுக்காகத்தான் இந்த ஷார்ட் வீடியோ.

உங்களுடைய அன்புக்கும் ஓட்டுக்குள் மிக்க நன்றி என புன்னகையுடன் கூறி லவ் யூ டூ ஆல் என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இது குறித்து சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Kalakkal Cinema
Top