Dailyhunt
Breaking : தளபதி 65 ஹீரோயின் இவர்தான். டாபி ஹீரோயின்களை நெருங்கிய சம்பளம்.!!

Breaking : தளபதி 65 ஹீரோயின் இவர்தான். டாபி ஹீரோயின்களை நெருங்கிய சம்பளம்.!!

Kalakkal Cinema 5 years ago

தளபதி 65 ஹீரோயின் யார் என்பது குறித்தும் அவருக்கு சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Thalapathy 65 Movie Heroine Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 50வது நாளை தாண்டி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும் பஸ் ஆபீஸ் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதை படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு நெல்சன் திலீப்குமார இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

அவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க ரூபாய் 7.5 கோடி சம்பளம் கேட்டதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

பூஜா ஹெக்டேவிற்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல மார்க்கெட் இருப்பதால் அவரையே நாயகியாக கமிட் செய்துள்ளது.

சம்பளமாக ரூபாய் 3.5 கோடி ரூபாயையும் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalakkal Cinema